கடவுச்சொல் : Password

கடவுச்சொல் : Password

தொழில்நுட்பம்\இணையம்\கைபேசி இல்லாமல் இருப்பது, பயங்கரமா போர்(bore) அடிக்குது சொல்றங்க இன்றைய தலைமுறை. ஒவ்வொரு நாளும் இணையம் வளர, இணையதள திருட்டுகளும்(hacking) வளருது. நாம பயன்படுத்தக் கூடிய ஒவ்வொரு சமூக வலைதளங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கத்தான் செய்யுது.

சமூக வலைதளங்களில் நாம என்ன பதிவு பண்ணாலும் அது நமக்கு சொந்தமில்லைதான்.

Collage 2017-04-16 17_15_54.jpg

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஹேக்கர்ஸ்னு(hacker) சொல்லக்கூடிய இணையதள திருடர்கள், நாம் பயன்படுத்தக் கூடிய wifiஇல் ஊடுருவரலாம். நாம் பயன்படுத்தக் கூடிய சாதனம்(டிவைஸ்) கணினியோ/கைபேசியோ அதை கட்டுப்படுத்தலாம்.

சில நாளைக்கு முன்னாடி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகேர்பெர்க் அவர்கள், தன்னுடைய பேஸ்புக் கணக்கில் ஒரு புகைப்படம் பகிர்வு செய்திருந்தார். அதில் தன்னுடைய மடிக்கணினியின் வெப்கேம், மைக் மறைத்து வைத்து இருந்தார். அதை பற்றி இனைய உலகத்தில் பல விவாதங்கள் நடந்தது. தன்னுடைய மடிக்கணினி யாராவது ஊடுருவினாலும் அவரோட வெப்கேம் மற்றும் மைக் மூலமாக எந்த தகவலும் திருட படக்கூடாதுனு என்கிற நோக்கத்தில் அவர் அப்படி செய்து இருக்கலாம் என்பது போன்ற விவாதங்கள் அதிகமா பேசப்பட்டது.

13393972_10102910644965951_4268170000962807139_n.jpg

அதற்காக இணையதளங்களை பயன்படுத்த கூடாதா? பயன்படுத்தாமல் நம்மால் இருக்க முடியாது, ஆனால் நாம் பயன்படுத்தக் கூடிய இனையதளத்தின் கணக்கை மிகவும் பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும். சமூக வலைத்தளங்களில் நாம என்ன பதிவு செய்கிறோம் என்பதிலும் கவனம் தேவை.

இனையதளத்தின் கணக்கை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள

  • அதனுடைய கடவுச்சொல்லை மிகக் கடினமாக வைத்து கொள்ளவேண்டும்.
  • கேப்ஸ், ஸ்மால், எண்கள் மற்றும் குறியீடுகள் சேர்ந்த கடவுச்சொல்லாய் இருக்க வேண்டும்.
  • Two-Factor Authentication(TFA) என்று சொல்லக்கூடிய இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை அமைத்துக் கொள்ளவேண்டும்.
  • வெவ்வேறு இனைய தளங்களுக்கு ஒரே மாதிரியான கடவச்சொல்லை பயன் படுத்தக் கூடாது.

இப்போல்லாம் மொபைல் செயலிகள்(apps) இரண்டு அடுக்கு பாதுகாப்பு கோடை(code) தானாகவே சரிபார்த்துக் கொள்கிறது, இதுவும் மிகவும் தவறுதான்.

நாம் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு முறைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்தால் தான் நம்முடைய இனையதள கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s