Category: Social

கடவுச்சொல் : Password

கடவுச்சொல் : Password

தொழில்நுட்பம்\இணையம்\கைபேசி இல்லாமல் இருப்பது, பயங்கரமா போர்(bore) அடிக்குது சொல்றங்க இன்றைய தலைமுறை. ஒவ்வொரு நாளும் இணையம் வளர, இணையதள திருட்டுகளும்(hacking) வளருது. நாம பயன்படுத்தக் கூடிய ஒவ்வொரு சமூக வலைதளங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கத்தான் செய்யுது.

சமூக வலைதளங்களில் நாம என்ன பதிவு பண்ணாலும் அது நமக்கு சொந்தமில்லைதான்.

Collage 2017-04-16 17_15_54.jpg

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஹேக்கர்ஸ்னு(hacker) சொல்லக்கூடிய இணையதள திருடர்கள், நாம் பயன்படுத்தக் கூடிய wifiஇல் ஊடுருவரலாம். நாம் பயன்படுத்தக் கூடிய சாதனம்(டிவைஸ்) கணினியோ/கைபேசியோ அதை கட்டுப்படுத்தலாம்.

சில நாளைக்கு முன்னாடி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகேர்பெர்க் அவர்கள், தன்னுடைய பேஸ்புக் கணக்கில் ஒரு புகைப்படம் பகிர்வு செய்திருந்தார். அதில் தன்னுடைய மடிக்கணினியின் வெப்கேம், மைக் மறைத்து வைத்து இருந்தார். அதை பற்றி இனைய உலகத்தில் பல விவாதங்கள் நடந்தது. தன்னுடைய மடிக்கணினி யாராவது ஊடுருவினாலும் அவரோட வெப்கேம் மற்றும் மைக் மூலமாக எந்த தகவலும் திருட படக்கூடாதுனு என்கிற நோக்கத்தில் அவர் அப்படி செய்து இருக்கலாம் என்பது போன்ற விவாதங்கள் அதிகமா பேசப்பட்டது.

13393972_10102910644965951_4268170000962807139_n.jpg

அதற்காக இணையதளங்களை பயன்படுத்த கூடாதா? பயன்படுத்தாமல் நம்மால் இருக்க முடியாது, ஆனால் நாம் பயன்படுத்தக் கூடிய இனையதளத்தின் கணக்கை மிகவும் பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும். சமூக வலைத்தளங்களில் நாம என்ன பதிவு செய்கிறோம் என்பதிலும் கவனம் தேவை.

இனையதளத்தின் கணக்கை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள

 • அதனுடைய கடவுச்சொல்லை மிகக் கடினமாக வைத்து கொள்ளவேண்டும்.
 • கேப்ஸ், ஸ்மால், எண்கள் மற்றும் குறியீடுகள் சேர்ந்த கடவுச்சொல்லாய் இருக்க வேண்டும்.
 • Two-Factor Authentication(TFA) என்று சொல்லக்கூடிய இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை அமைத்துக் கொள்ளவேண்டும்.
 • வெவ்வேறு இனைய தளங்களுக்கு ஒரே மாதிரியான கடவச்சொல்லை பயன் படுத்தக் கூடாது.

இப்போல்லாம் மொபைல் செயலிகள்(apps) இரண்டு அடுக்கு பாதுகாப்பு கோடை(code) தானாகவே சரிபார்த்துக் கொள்கிறது, இதுவும் மிகவும் தவறுதான்.

நாம் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு முறைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்தால் தான் நம்முடைய இனையதள கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும்.

Advertisements

இலான் மஸ்க் (Elon Musk ) – புது உலகின் பிதாமகன்

blog_elon_musk

இலான் மஸ்க் (Elon Musk ).

 • “செவ்வாய் கிரகத்தில் தான் நான் சாக வேண்டும்” என்று கூறிய இலான் மஸ்க் (Elon Musk ), SpaceX , Telsa , Solar City போன்ற முன்னோடி நிறுவனங்களின் முதன்மை அதிகாரி, நிறுவனர்.
 • ஆப்பிரிக்காவில் பிறந்து, பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயந்த இலான் மஸ்க் (Elon Musk ), தனது 12வது வயதில் மென்பொருள் துறையில் விளையாட்டு மென்பொருள்களை எழுதும் திறமையை கொண்டிருந்தார்.
 • இணையசேவை (Internet ) வளர தொடங்கிய காலகட்டத்தில், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து , தனது சகோதரனுடன் இணைத்து Zip2 என்ற நிறுவனத்தை தொடங்கி “New York Times” போன்ற வாடிக்கையாளர்களை கொண்டிருந்த நிறுவனத்தை 30 கோடி ரூபாய்க்கும் மேலாக AltaVista என்ற நிறுவனத்திடம் விற்று பெரும் பொருளீட்டினார்.
 •  1999 ஆம் X.com என்ற மின்னணு பண பரிவர்த்தனை நிறுவனத்தை தொடங்கிய இலான் மஸ்க், பின்னர் அதன் போட்டி நிறுவனமான Confinity உடன் இணைத்து PayPal என்று புது பெயரிட்டு அதன் முதன்மை அதிகாரி (CEO) ஆக பதவியேற்றார்.
 • 2002ஆம் ஆண்டு PayPal நிறுவனத்தை Ebay வாங்கியது.இலான் மஸ்க் (Elon Musk ) தனது பங்கான $180 million பணத்துடன், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மின்னணு கார்கள் உற்பத்தியில் ஈடுபட ஆயத்தமானார்.
 • Telsa Motors: கார்களின் மீது அபார காதல் கொண்ட இலான் மஸ்க் (Elon Musk ), 2003ஆம் ஆண்டு $70 million முதலீடு செய்து Telsa Motors இல் இணைந்து பிறகு அதன் தலைவர் ஆனார். கார்களில் மாற்றங்களை புகுத்திய இலான் மஸ்க் (Elon Musk ), அவரது முயற்சிக்காக 2006ஆம் ஆண்டு “Global Green 2006 product design award for Tesla Roadster design” வாங்கினார்.
 • SpaceX : விண்வெளி ஆராய்ச்சிக்காகவும், விண்வெளி பயண போக்குவரத்துக்காகவும், மறுசுழட்சி முறையில் பயன்படுத்தக்கூடிய Rockets(ஏவூர்தி) தயாரித்து வரும் SpaceX , அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA உடன் “$1.6 billion” மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்று, மிக சிறப்பாக செயல் பட்டு வருகிறது. மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
 • Solar City : இயற்கையின் வரமான சூரிய ஒளியை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட, இலான் மஸ்க் (Elon Musk ) ஆல் தொடங்கப்பட்ட நிறுவனம் Solar City. “Ebay” மற்றும் “British Motors” போன்ற மிகப்பெரிய நிறுவனங்களை வாடிகையாளர்களா கொண்டுள்ளது.

இலான் மஸ்க் (Elon Musk )ன் பொன்மொழிகள்:

 • “சிறந்த நிறுவனங்கள், அதன் சிறப்பான படைப்புகளின் மூலமே உருவாக்க படுகின்றன.”
 • “நீங்கள் விரும்பிய முயற்சி வெற்றி பெற, சூழ்நிலைகளை சார்ந்து இருக்க கூடாது”

அசாத்திய முயற்சிகளை மேற்கொண்டு பல துறைகளிலும் வெற்றி காணும் இலான் மஸ்க் (Elon Musk), ஒரு வாழும் வரலாறு.

Wikipedia