அட்டாச்மென்ட் பூதம்

அட்டாச்மென்ட் பூதம்

சின்ன வயசுல phishingக்கும் fishingக்கும் வித்தியாசம் புரியாமதான் இருந்துச்சு.

இந்த ஃபிஷிங்னா(phishing attack)என்ன ?

நமக்கு வந்த மின்னஞ்சலில் (e-mail) அல்லது குறுந்தகவலில்(SMS), இணைப்பு(attachment) செய்யப்பட்டு இருக்கும் கோப்பை(file) நாம் திறக்கும் பொழுது, அந்த கோப்பு நம்முடைய கணினியில் அல்லது கைபேசியில் புகுந்து நம்முடைய முக்கியமான தகவல்களை திருடலாம் அல்லது மாற்றம் செய்யலாம்.

இந்த மாதிரியான மின்னஞ்சல்களில் வரக்கூடிய கோப்புகள் “malware” னு சொல்லுவாங்க. பொதுவா இது ஒரு executable(இயங்கக்கூடிய) கோப்பாகவோ அல்லது ஒரு ஜாவாஸ்கிரிப்ட் கோப்பாகவோ இருக்கலாம். இந்த இரண்டு விதமான கோப்புகளும் நாம் திறக்க ஆரம்பித்ததும் தானாக இயங்க ஆரம்பித்துவிடும்.

இந்த ஃபிஷிங் மூலமா ஒன்னு திருடலாம் இல்ல மாற்றம் செய்யலாம்னு பார்த்தோம். அது என்ன திருடுவது? நம்முடைய வங்கி கணக்குகள், இல்ல நம்முடைய அலுவலகம் சார்ந்த கோப்புகள்,அல்லது ஜிமெயில்(gmail) போன்ற சேவைகளோட கடவுச்சொல். நம்முடைய தகவல்களை திருடி, நம்மை முடக்குவதுதான் இந்த திருடர்களோட(attackers) வேலை.

ஹ்ம்ம், அது என்ன மாற்றம் செய்றது? அந்த “malware” நாம டவுன்லோட் செய்து, திறக்கும் போது அது இயங்க ஆரம்பித்து நம்முடைய கணினியில் இருக்கும் கோப்புகளை எல்லாம் encrypt செய்துவிடும்.

Encryptனா என்ன? நம்மாள படிக்க முடிந்த ஒரு டாக்குமென்டை(MS-WORD) படிக்க முடியாத அல்லது திறக்க முடியாத வேறு ஒரு அமைப்புக்கு மாற்றுவது. இப்போ அந்த டாக்குமெண்டை பழையபடி அதன் சுய அமைப்புக்கு மாத்தனும்னா decrypt பண்ணனும், அதுக்கு நமக்கு decrypt key வேணும். இங்க attacker என்ன பண்ணுவான், decrypt key வேணும்னா எனக்கு காசு கொடு, அதுவும் Bit Coins(டிஜிட்டல் பணம்) கொடுன்னு சொல்லுவான். இதுக்கு பேரு ransomware attackனு சொல்லுவாங்க.

ransomware attack அதாவது இணையத்தில் மிரட்டி பணம் வாங்குவது. கொஞ்ச நாளைக்கு முன்பு கூட wannacry ransomware பிரபலமாக இருந்தது. இதுக்கு இன்னொரு உதாரணம் சொல்லனும்னா zepto வைரஸ்.

Wannacry இந்தியாவில் ATM இயந்திரங்களை பாதித்ததுனு சொன்னங்க ஆனா ஒரு maleware இயக்க ஒரு மனிதன் தேவை இல்லை என்றால் வேறு ஒரு குறைபாடு அந்த கணினியில் இருக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் ATM இயந்திரங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும், அதனால இந்தியாவில் ATM இயந்திரங்கள் பாதிப்பு கம்மியாதான் இருக்கும் என்பது என்னோட கருத்து.

மின்னஞ்சல் மூலம் வரும் எந்த ஒரு தகவல் மற்றும் கோப்புகளை திறப்பதற்க்கு முன், எச்சரிக்கை தேவை. இல்லை என்றால் பிஷிங் அல்லது ransomeware தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

cross post: https://medium.com/@gokulraj/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-7fb2d6903880

Advertisements

AutoDraw – தானியங்கி ஓவிய திருத்தம் :)

இணைய உலகில் பல தொழில் நுட்ப புரட்சியை செய்த Google (கூகிள் ), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) எனப்படும் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட மற்றுமொரு பயனுள்ள படைப்பு “AutoDraw – தானியங்கி ஓவிய திருத்தம் :)”.

2ufjq3p

குழந்தைகளுக்கும் , ஓவியம் சார்ந்த தொழிலில் இருப்பவருக்கும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இது அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

“AutoDraw – தானியங்கி ஓவிய திருத்தம்” பயன்பத்தி இனி எல்லோரும் மிகச்சிறப்பாக ஓவியம் வரையலாம்.

  • எளிமையாக வடிவங்களையும் உருவங்களையும் வரையலாம்
  • பல வண்ண நிறங்களை பயன்படுத்தும் பன்முக தன்மை உள்ளது
  • எழுத்துக்களை வெவ்வேறு வடிவங்களின் பயன்படுத்த முடியும்
  • எல்லா வகை கணினியிலும் பயன்பத்தி வரையாக்கலாம்
  • எளிமையாக Download (தரை இறக்கம் ) செய்யலாம்
  • இது ஒரு இலவச மென்பொருள் (Free )

இப்போதே நீங்களும் ஓவியர் ஆகுங்கள் 🙂

AutoDraw Website

கடவுச்சொல் : Password

கடவுச்சொல் : Password

தொழில்நுட்பம்\இணையம்\கைபேசி இல்லாமல் இருப்பது, பயங்கரமா போர்(bore) அடிக்குது சொல்றங்க இன்றைய தலைமுறை. ஒவ்வொரு நாளும் இணையம் வளர, இணையதள திருட்டுகளும்(hacking) வளருது. நாம பயன்படுத்தக் கூடிய ஒவ்வொரு சமூக வலைதளங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கத்தான் செய்யுது.

சமூக வலைதளங்களில் நாம என்ன பதிவு பண்ணாலும் அது நமக்கு சொந்தமில்லைதான்.

Collage 2017-04-16 17_15_54.jpg

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஹேக்கர்ஸ்னு(hacker) சொல்லக்கூடிய இணையதள திருடர்கள், நாம் பயன்படுத்தக் கூடிய wifiஇல் ஊடுருவரலாம். நாம் பயன்படுத்தக் கூடிய சாதனம்(டிவைஸ்) கணினியோ/கைபேசியோ அதை கட்டுப்படுத்தலாம்.

சில நாளைக்கு முன்னாடி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகேர்பெர்க் அவர்கள், தன்னுடைய பேஸ்புக் கணக்கில் ஒரு புகைப்படம் பகிர்வு செய்திருந்தார். அதில் தன்னுடைய மடிக்கணினியின் வெப்கேம், மைக் மறைத்து வைத்து இருந்தார். அதை பற்றி இனைய உலகத்தில் பல விவாதங்கள் நடந்தது. தன்னுடைய மடிக்கணினி யாராவது ஊடுருவினாலும் அவரோட வெப்கேம் மற்றும் மைக் மூலமாக எந்த தகவலும் திருட படக்கூடாதுனு என்கிற நோக்கத்தில் அவர் அப்படி செய்து இருக்கலாம் என்பது போன்ற விவாதங்கள் அதிகமா பேசப்பட்டது.

13393972_10102910644965951_4268170000962807139_n.jpg

அதற்காக இணையதளங்களை பயன்படுத்த கூடாதா? பயன்படுத்தாமல் நம்மால் இருக்க முடியாது, ஆனால் நாம் பயன்படுத்தக் கூடிய இனையதளத்தின் கணக்கை மிகவும் பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும். சமூக வலைத்தளங்களில் நாம என்ன பதிவு செய்கிறோம் என்பதிலும் கவனம் தேவை.

இனையதளத்தின் கணக்கை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள

  • அதனுடைய கடவுச்சொல்லை மிகக் கடினமாக வைத்து கொள்ளவேண்டும்.
  • கேப்ஸ், ஸ்மால், எண்கள் மற்றும் குறியீடுகள் சேர்ந்த கடவுச்சொல்லாய் இருக்க வேண்டும்.
  • Two-Factor Authentication(TFA) என்று சொல்லக்கூடிய இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை அமைத்துக் கொள்ளவேண்டும்.
  • வெவ்வேறு இனைய தளங்களுக்கு ஒரே மாதிரியான கடவச்சொல்லை பயன் படுத்தக் கூடாது.

இப்போல்லாம் மொபைல் செயலிகள்(apps) இரண்டு அடுக்கு பாதுகாப்பு கோடை(code) தானாகவே சரிபார்த்துக் கொள்கிறது, இதுவும் மிகவும் தவறுதான்.

நாம் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு முறைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்தால் தான் நம்முடைய இனையதள கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும்.

இலான் மஸ்க் (Elon Musk ) – புது உலகின் பிதாமகன்

blog_elon_musk

இலான் மஸ்க் (Elon Musk ).

  • “செவ்வாய் கிரகத்தில் தான் நான் சாக வேண்டும்” என்று கூறிய இலான் மஸ்க் (Elon Musk ), SpaceX , Telsa , Solar City போன்ற முன்னோடி நிறுவனங்களின் முதன்மை அதிகாரி, நிறுவனர்.
  • ஆப்பிரிக்காவில் பிறந்து, பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயந்த இலான் மஸ்க் (Elon Musk ), தனது 12வது வயதில் மென்பொருள் துறையில் விளையாட்டு மென்பொருள்களை எழுதும் திறமையை கொண்டிருந்தார்.
  • இணையசேவை (Internet ) வளர தொடங்கிய காலகட்டத்தில், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து , தனது சகோதரனுடன் இணைத்து Zip2 என்ற நிறுவனத்தை தொடங்கி “New York Times” போன்ற வாடிக்கையாளர்களை கொண்டிருந்த நிறுவனத்தை 30 கோடி ரூபாய்க்கும் மேலாக AltaVista என்ற நிறுவனத்திடம் விற்று பெரும் பொருளீட்டினார்.
  •  1999 ஆம் X.com என்ற மின்னணு பண பரிவர்த்தனை நிறுவனத்தை தொடங்கிய இலான் மஸ்க், பின்னர் அதன் போட்டி நிறுவனமான Confinity உடன் இணைத்து PayPal என்று புது பெயரிட்டு அதன் முதன்மை அதிகாரி (CEO) ஆக பதவியேற்றார்.
  • 2002ஆம் ஆண்டு PayPal நிறுவனத்தை Ebay வாங்கியது.இலான் மஸ்க் (Elon Musk ) தனது பங்கான $180 million பணத்துடன், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மின்னணு கார்கள் உற்பத்தியில் ஈடுபட ஆயத்தமானார்.
  • Telsa Motors: கார்களின் மீது அபார காதல் கொண்ட இலான் மஸ்க் (Elon Musk ), 2003ஆம் ஆண்டு $70 million முதலீடு செய்து Telsa Motors இல் இணைந்து பிறகு அதன் தலைவர் ஆனார். கார்களில் மாற்றங்களை புகுத்திய இலான் மஸ்க் (Elon Musk ), அவரது முயற்சிக்காக 2006ஆம் ஆண்டு “Global Green 2006 product design award for Tesla Roadster design” வாங்கினார்.
  • SpaceX : விண்வெளி ஆராய்ச்சிக்காகவும், விண்வெளி பயண போக்குவரத்துக்காகவும், மறுசுழட்சி முறையில் பயன்படுத்தக்கூடிய Rockets(ஏவூர்தி) தயாரித்து வரும் SpaceX , அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA உடன் “$1.6 billion” மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்று, மிக சிறப்பாக செயல் பட்டு வருகிறது. மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
  • Solar City : இயற்கையின் வரமான சூரிய ஒளியை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட, இலான் மஸ்க் (Elon Musk ) ஆல் தொடங்கப்பட்ட நிறுவனம் Solar City. “Ebay” மற்றும் “British Motors” போன்ற மிகப்பெரிய நிறுவனங்களை வாடிகையாளர்களா கொண்டுள்ளது.

இலான் மஸ்க் (Elon Musk )ன் பொன்மொழிகள்:

  • “சிறந்த நிறுவனங்கள், அதன் சிறப்பான படைப்புகளின் மூலமே உருவாக்க படுகின்றன.”
  • “நீங்கள் விரும்பிய முயற்சி வெற்றி பெற, சூழ்நிலைகளை சார்ந்து இருக்க கூடாது”

அசாத்திய முயற்சிகளை மேற்கொண்டு பல துறைகளிலும் வெற்றி காணும் இலான் மஸ்க் (Elon Musk), ஒரு வாழும் வரலாறு.

Wikipedia

வணக்கம். முதல் முயற்சி :)

வணக்கம்,

இணையத்தின் வளர்ச்சி ஈடுஇணையற்றது. அதில் ஒவ்வொரு நாளும் வெளிவரும் மென்பொருள்கள், அதன் பயன்பாடுகள் பற்றியும், அதனை சார்ந்த முயற்சிகளை பற்றியும் தமிழில் எழுதி, அதன் முலம் ஒருவர் பயன் அடைந்தாலும் மிக்க மகிழ்ச்சி :).

வருகைக்கு நன்றி

vankkam